கிளிநொச்சி மாவட்டத்தில் 142 க்கு மேற்பட்ட ஆடு, மாடுகள் இறப்பு
சீரற்ற காலநிலையினால் 172 குடும்பங்களை சேர்ந்த 585 பேர் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிடைப்பெற்ற தகவல்களுக்கு (09) அமைய 142 க்கு மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்துள்ளதுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 172 குடும்பங்களைச்சேர்ந்த 585 பேர் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
34 வீடுகள் பகுதியளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மாவட்ட அனர்த்தமுகாமைத்துப் பிரிவு 42 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதுகாப்பாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை புயலின் காரணமாக A9 பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகளில் முறிவடைந்த மரங்களினை வெட்டியகற்றும் பணியில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் பிரதேச சபை , இலங்கை மரக்கூட்டுத்தாபனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
துண்டிக்கப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் மாவட்டத்தில் குளிருடனான காலநிலை தொடர்வதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளமையினை அவதானிக்க முடிகிறது.