நீளமான பாடசாலைக் கொடியுடன் ஸஹிரா நடைபவணி
மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு “ஸஹிரா நடைபவணி” இன்று (11) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது .
பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் நடந்தேறிய நடைபவணியில் குதிரை யானை உட்பட பலரகவாகனங்கள், விநோத ஆடைகளில் கண்கவர் பொம்மை ஆடை தாங்கிய மனிதர்கள் என இன்னோரன்ன சுவாரஷ்ய நிகழ்வுகள் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றிய து
நாலாபக்கங்களிலும் வந்து கல்வி கற்ற கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் மிக நீளமான பாடசாலைக் கொடி என்ற பெருமையை சுமந்த ஸஹிராத்தாயின் 250 மீற்றர் நீளமான பாடசாலைகொடி கல்லூரியின் 83 ம் batch இனால் தயாரிக்கப்பட்டு 100 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்மையும் குறிப்பிடத்தக்கது.
(தகவல் – பின்த் அமீன்)