தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் அதிகரிப்பு
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கை முழுவதும் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு அதிகரித்த நிலையில் தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சிறு குழந்தைகளுக்கு வைரஸ் நோய்கள் விரைவாகப் பரவும் என்பதால், இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் உள்ள குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், நீண்டகால சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர் இந்த நேரத்தில் தங்கள் உடல் நலம் குறித்து அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.