crossorigin="anonymous">
பொது

புலமைப் பரிசில் பரீட்சையில் 2ம் பகுதி வினா பத்திரமே முதலில்

(நதீர் ஷரீஃடீன்)

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெற உள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் போது முதலில் பகுதி 2 வினாப் பத்திரம் வழங்கப்படும்.அதன் பின்னரே பகுதி 1 வினாப் பத்திரம் வழங்கப்படும் என உதவி பரீட்சை ஆணையாளர் வருணி செனவிரத்ன தெரிவித்தார்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கான அறிவுறுத்தற் கூட்டம்  இன்று (12) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

“இதுவரை காலமும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பகுதி 1 வினாப் பத்திரம் முதலில் வினியோகிக்கப்பட்டது.இம்முறை பரீட்சையில் தான் ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்களைக் கொண்ட பகுதி 2 வினாப் பத்திரம் முதலில் வினியோகிக்கப்பட உள்ளது அதன் பின்னரே ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட பகுதி 1 வினாப் பத்திரம வினியோகிக்கப்படும். இது விடயமாக அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல் இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் பெறப்பட்டது போலவே பரீட்சார்த்திகள் திருத்தங்களை அதாவது பெயர், பால், பிறந்த திகதி, வருமானம் ஆகியவற்றை நிகழ்நிலை மூலம் மேற்கொள்ள முடியும்.

மேற்கூறிய திருத்தங்களுக்காக பரீட்சை திணைக்களத்திற்கு நேராக வரவேண்டிய அவசியம் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 + = 50

Back to top button
error: