crossorigin="anonymous">
பிராந்தியம்

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும் (07) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஷ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகருமான ஏ. ஆர். எம். அன்சார், கிழக்கு இளைஞர் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகருமான றிஷாத் ஷெரீப்,

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நஸ்மியா சனூஸ், ஓய்வு பெற்ற அதிபரும், சமூக செயற்பாட்டாளரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகருமான எம்.பி. அப்துல் ஹமீத், கல்முனை ஆர்டிஎச்எஸ் இன் மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஷான், நாவிதன்வெளி பிரதேசபை உறுப்பினர் எம்.பி. நவாஸ், சமூக சேவகர் சட்டத்தரணி எம்.ஏ. முஹம்மட் லாபீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

கிழக்கு இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சாய்ந்தமருது கமு/அல்-ஹிலால் வித்யாலயத்தின் பிரதி அதிபர் றிப்கா அன்சார், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. எல். எஸ். ஜாரியா, நிந்தவூர் பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.ஆர்.றிஸ்வானுல் ஜன்னா, சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் எம்.வை நௌஸானா, கல்வித் திணைக்களத்தின் உளவள ஆலோசகர் அஷ்ரக் இஸ்மாயில்,
சர்வ மத குழு பிராந்திய தலைவர் ஐ.எல். ஹாசிம் உட்பட அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் துறை சார்ந்த பலர் அவர்களது சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி பல்வேறு வகையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஓர் அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேற்படி அமைப்பில் புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டதோடு, அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களுக்கான கௌரவம், இலக்கிய துறை மூலம் அமைப்புக்கு ஆதரவு வழங்கும் எழுத்தாளர்களுக்கான கௌரவம், ஊடகத்தில் சிறப்பாகச் சேவையாற்றிவரும் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு, இளம் சாதனையாளர்கள் கௌரவிப்பு, இளம் தலைவர்கள் கௌரவிப்பு,

கலை நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்கள் கௌரவிப்பு, உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் சிறப்பு அதிதிகள் கௌரவிப்பு, கௌரவ அதிதிகள் கௌரவிப்பு ஆகியவற்றுடன் உளவியல் பயிற்சியினைப் பூர்த்தி செய்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் கல்வி நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, அந்நிகழ்வுகள் பார்வையாளர்களைக் கவர்ந்து பலரது பாராட்டைப் பெற்று, பரவசப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் செயலாளர் முபாரக் முஸ்தபா, பிரதி தலைவர் எம்.எஸ்.எம். ஹர்பான், நிர்வாக செயலாளர் எம்.ஐ.எப்.சஜீனா, பிரதி செயலாளர் ஆர்.எம்.தன்ஸீம், பொருளாளர் ஏ.ஆர்.எப்.சிரோனி, தேசிய அமைப்பாளர் எஸ்.சலீம் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கல்வீமான்கள், புத்திஜீவிகள், அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 62 = 70

Back to top button
error: