பேராதனைப் பல்கலைக்கழக 10 மாணவர்கள் இடைநிறுத்தம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் புவியியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்தன மற்றும் அவரது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டின் மீது தாக்ககுதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அடையாளங்காணப்பட்ட பத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான டெரன்ஸ் மதுஜித் (13) தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தாக்குதலின் போது அதனை நேரில் கண்ட அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் , பத்து மாணவர்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில மாணவர்களை அடையாளங்காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர், எதிர்காலத்தில் மேலும் சில மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்படலாம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.