crossorigin="anonymous">
பொது

1,000 பாடசாலைகளுக்கு ரூ.100 கோடி செலவில் இணைய வசதிகள்

1,000 பாடசாலைகளுக்கு 100 கோடி ரூபா செலவில் இணைய வசதிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சில் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும உள்ள 100 கல்வி வலயங்கள், 120 கல்வி வலயங்களாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கல்வி வலயங்களை அதிகரித்ததன் பின்னர் ஆசிரியர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலகுவாக அமையும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 + = 67

Back to top button
error: