ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில் வழங்கும் இறுதி திகதி நீடிப்பு
2024 க.பொ.த உயர் தரத்துக்கு தோற்ற தகுதி பெற்ற பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 2022 டிசம்பர் 30 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக விண்ணப்ப திகதியே 2022 டிசம்பர் 30 வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரும் மாணவர்களும் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதியை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி ஏற்கனவே 2022-12-23 என அறிவிக்கப்பட்டிருந்து