நத்தாரை முன்னிட்டு 309 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
நத்தாரை முன்னிட்டு 309 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பெண்களும் அடங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று (25) சிறைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு , அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக கைதிகள் அனைவருக்கும் விசேட பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி,பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ள தண்டனையை அனுபவித்துவரும் கைதிகளின் எண்ணிக்கை 237 ஆகும்.
தண்டனைக் காலம் ஒரு மாதம் குறைக்கப்பட்ட 71 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். எனினும், விடுவிக்கப்படும் மேலும் 61 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்குகள் இருப்பதே இதற்குக் காரணம் என சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.