கண்டி – அக்குறணை நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா பெருக்கெடுத்ததில் அக்குறணை நகர பிரதேசம் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளது
அக்குறணை நகரின் சியா வைத்தியசாலை சந்தியில் சுமார் ஆறு அடி வரையும் நகரின் ஏனைய பகுதிகளில் சுமார் நான்கு அடி வரையும் வெள்ளநீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்
நகரில் காணப்பட்ட வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் பெருமளவு பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இச்செய்தி எழுதப்படும் வரை ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை
இருப்பினும் அக்குறணை நகர வர்த்தகர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பல கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பொருற்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு வருடா வருடம் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக பொருளாதார இழப்புக்களை சந்திந்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள்
நகர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நகர் ஊடாக செல்லும் கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் போக்குவரத்தும் தடை ஏற்பட்டுள்ளது.