கண்டி நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இன்று (25) காலை கண்டி பிரதான புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன்காரணமாக கண்டி புகையிரத போக்குவரத்தும் தடை ஏற்பட்டுள்ளது
அதேவேளை அக்குறணை நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா பெருக்கெடுத்ததில் அக்குறணை நகர பிரதேசம் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளது.