இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதுதொடர்பில் விளிப்புடன் செயல்படுமாறு நிறுவனம் அறிவித்துள்ளது..