சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
சுனாமி அனர்த்தத்தினால் பல்லாயிரம் மக்கள் பலியான துயரத்தின் 18 ஆம் வருட நினைவு தின நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இன்று (26) நடைபெறுகின்றன.
இதன் பிரதான நிகழ்வு காலி சுனாமி நினைவுத் தூபியில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.
சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி ஊடகப் பணிப்பாளர் ஜானக ஹந்துன்பதிராஜா இதை தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.