ஜனவரி ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்புமனு கோரல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
சில காரணங்களினால் தேர்தல் குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.