crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பில் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா

அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா “வாழும்போதே வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் (24) சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும், சாதனையாளர்களுக்குமான சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது வழங்கும் விழா மட்டக்களப்பு ஊறணி ஹிரிபோஜன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் கலாபூசணம் யு.எல்.எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்துறை சாதனையாளர்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

இதன்போது பல்துறைசார் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து “சாமஸ்ரீ தேச மானிய” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கும் இதன்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஊடகத்துறை சார்ந்து செயற்பட்டுவரும் சுயாதீன ஊடகவியளாளரும் சமூக சேவையாளருமான உதயகுமார் உதயகாந்திற்கும் இதன்போது “சாமஸ்ரீ தேச மானிய” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு கெளரவ அதிதிகளாக கலாநிநி பொன்.நல்லரெத்தினம், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியம் உள்ளிட்டோரும்,

சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கலாநிதி எஸ்.எம்.சதாத், அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 4

Back to top button
error: