crossorigin="anonymous">
பிராந்தியம்

மூதூர் பிரதேச கலை இலக்கிய விழா

மூதூர் பிரதேச கலை இலக்கிய விழா நேற்று (26) சம்பூர் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு கலை கலாசார அம்சங்கள், ரொபட் நொக்ஸ் கொட்டியாரம் வந்து இறங்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட நாடகம் உட்பட பல நிகழ்வுகள் இதன்போது அரங்கேறின.
பிரதேச மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

துறைசார் ரீதியாக கலை இலக்கிய விடயங்களில் திறமைகளை வெளிக்கொணர்ந்த இளங்கலைஞர்கள், சிரேஸ்ட்ட கலைஞர்கள் பலர் இதன்போது பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுன் அவர்களுக்கான சான்றி்தழ்களும் வழங்கப்பட்டன.

மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் சேவைகளை பாராட்டும் பொருட்டு பிரதேச இலக்கிய அதிகாரசபை அவர்களுக்கு பொன்னாடை அணிவித்ததுடன் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தன.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ், மூதூர் பிரதேச சபை தவிசாளர், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: