crossorigin="anonymous">
உள்நாடுபொது

கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா பயணம்

ஜனாதிபதி பதவி விலகிய இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார்.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அப்போது ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்ச, அங்கிருந்து வெளியேறினார்.

மக்கள் போராட்டம் வலுவடைந்ததால் ஜூலை 13-ஆம் திகதி அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தவாறே ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றார். அவர் அமெரிக்கா செல்ல விரும்பியபோதிலும், விசா கிடைக்காததால் . கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + = 9

Back to top button
error: