crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்க உத்தியோகத்தர்களுகு விசேட கொடுப்பனவு

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (02) முதல் வழங்கப்படுகிறது.
அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

2023 பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர், இந்த கொடுப்பனவை செலுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்பதுடன், 2023 ஆம் ஆண்டுக்குள் உரிய தொகை மீள அறவிடப்பட வேண்டும் என்றும் இச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + = 10

Back to top button
error: