crossorigin="anonymous">
உள்நாடுபொது

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கை அரசியலமைப்புக்கு முரன்”

'விசேட பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும்'

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இருப்பினும் குறிப்பிட்ட சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் அல்லது நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் தேவையான விசேட பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்

62 பக்கங்களைக்கொண்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் சரத்துக்களில் எவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்னாண்டோ, ஜனக்க டி சில்வா ஆகியோர் இந்த வியாக்கியானத்தை வழங்கியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 + = 68

Back to top button
error: