இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை,
(i) புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும்
(ii) குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்