crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி

புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர், தூதுவர் ஒருவர் மற்றும் நிறுவனத்தலைவர்கள் இருவரை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியது.

அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி சித்ராங்கனி வாகிஸ்வரவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசுக்கான புதிய தூதுவராக எம்.எச்.எம்.என். பண்டாவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கமத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்கவின் நியமனமும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டதாக தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார்.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய தலைவராக சி.பீ. அதுலுவகேவின் நியமனம், மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக என்.கே.ஏ.ஜீ. நாரகலவின் நியமனமும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: