கலவை சேர்க்கப்படாத தேங்காய் எண்ணெய் மருத்துவ குணம் கொண்ட உணவாகும்
மேற்கத்தைய நாடுகளில் தேங்காய் எண்ணெய முதல்தரமான உணவாகும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
எண்ணெய்களின் கலவை மற்றும் விற்பனை காரணமாக தேங்காய் எண்ணெயின் தரம் மோசமடைந்தது. தேங்காய் எண்ணெயை வேறு எந்த எண்ணெயிலும் கலக்கக்கூடாது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய கூறினார்
எந்தவொரு கலவையும் சேர்க்கப்படாத தேங்காய் எண்ணெய் மருத்துவக் குணம் கொண்ட உணவாகும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியை தேங்காய் எண்ணெய் அதிகரிக்கிறது. சுவாச கட்டமைப்பின் தோலைப் பாதுகாக்கவும் மற்றும் பல்லின் உறுதிக்கும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது என்றும் அவர் கூறினார்.
நெதர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகள் தேங்காய் எண்ணெயைக் கூடுதலாகப் பயன்படுத்துவதாகவும் அரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய சுட்டிக்காட்டினார்.
சிலர் மற்ற எண்ணெய் வகைகளை ஊக்குவிப்பதற்காக தேங்காய் எண்ணெய்யின் தரத்தை குறைத்து மதிப்பிட முயற்சித்தனர் ஆனால் முன்னாள் இருதய நோய் மருத்துவர் டாக்டர் டி.பி. அதுகோரலா அதற்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார் என்றும் திரு பாதேனியா தெரிவித்தார