வெளிநாடு
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் (Pervez Musharraf) தமது 79ஆவது வயதில் இன்று (05) காலமானார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் உடல்நலக் குறைவினால் துபாயிலுள்ள வைத்தியசாலையொன்றில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் காலமானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் 2016ஆம் ஆண்டிலிருந்து துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2001ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பர்வேஸ் முஷாரஃப் பதவி வகித்தார்.