அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை புதன்கிழமை (08) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதுடன் இதற்கமைய, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளில் இருந்து அவர்கள் விலகவுள்ளனர்.
மருந்து பற்றாக்குறை மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
சத்திர சிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு போன்ற விசேட சேவைகளில் இருந்து தாம் விலகப்போவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரம், நீர், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் நாளை புதன்கிழமை எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.