இலங்கை சுதந்திர தொழிலாளா் சங்கம் இன்று (08) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை கொழும்பு புறக்கோட்டையில் நடாத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு. மின் கட்டணம் அதிகரிப்பு, நீர் விநியோகக் கட்டணம் அதிகரிப்பு, பெற்றோல், எரிவாயு விலை அதிகரிப்பு, மக்கள் தலைகளில் அரசாங்கம் பாரிய வரியை சுமத்தியுள்ளது என தொழிற் சங்கங்களின் தலைவா். செயலாளா்கள் தெரிவித்தனர்
மின்சாரம், பெற்றோலியம், லேக்ஹவுஸ், எயாா் லங்கா, நீரி விநியோக போன்ற அதிகார சபைகளின் சுதந்திர தொழிலாளா்கள் சங்கங்களின் தலைவா் செயலாளா்கள் (06) ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனா்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று புதன்கிழமை (08) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதுடன் இதற்கமைய, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளில் இருந்து அவர்கள் விலகவுள்ளனர்.
அதேவேளை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.