சாந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் நேற்று (07) காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ஸ்ரீமோகனன் மற்றும் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லினக்க செயற்பாடு திட்ட பிரதானி திரு.கார்த்திகேயன், நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அவந்தி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு குறித்த கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லினக்க செயற்பாடு திட்டத்தின் (SCORE) கீழ் சிறகுகள் பண்பாட்டு மன்றம் ஊடாக சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுநோக்கு மண்டபம் கிராம சேவகர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து பணியாற்றுவதற்கு ஏதுவாக பிரத்தியேகமான அறைகளுடன் தளபாட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்பகுதி மக்கள் சகல சேவைகளையும் தமக்கு அண்மித்த ஓரிடத்தில் இலகுவாக பெறக்கூடியவாறு நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலுவலக வளாகத்தில் சேவை நாடிகளுடன் வருகின்ற சிறுவர்களின் பொழுது போக்கிற்காக சிறிய விளையாட்டு முற்றமும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொள்ளும் வகையிலான அலுவலக தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ஸ்ரீமோகனன், சமூக ஒத்திசைவு மற்றும் நல்லினக்க செயற்பாடு திட்ட பிரதானி திரு.கார்த்திகேயன், நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அவந்தி, கரைச்சி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. அமல்ராஜ்,
சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் திரு. பெ.கணேசன், சிறகுகள் பண்பாட்டு நிலையத்தின் தலைவி தேவிகா, மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,சாந்தபுரம் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.