crossorigin="anonymous">
உள்நாடுபொது

டயனா கமகே கைது செய்ய பிடியாணை அவசியமில்லை – நீதவான்

டயனா கமகே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளமை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவருவதாகவும் அவை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்கள் என்பதாலும் அவரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதவான் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தௌிவாகியுள்ளதால், அவரை கைது செய்ய முடியும் என நீதிமன்றம் இன்று (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான குசல லக்மால் ஹேரத் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு, இன்று கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 27

Back to top button
error: