துருக்கிக்கு உலக வங்கி 1.78 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு உதவும் வகையில் உலக வங்கி 1.78 பில்லியன் அமெரிக்க டொலரை உதவுத் தொகையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் அந்நாட்டு அரசாங்கம், குறுகியகால செலவுகளை தீர்த்துக் கொள்வதற்காக இந்தத் தொகை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாக துருக்கியின் பிரதி அதிபர் புவாட் ஒக்டேவ அல்ஜசீரா செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் உறுதிப்படுத்தினார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இதுவரை 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.