இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (13) நடைபெற்றதுடன் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
01. இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 2023 ஜனவரி மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை
இரு தரப்பினரும் பல துறைகளில் பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதன் மூலம் மேலும் விருத்தி செய்யக்கூடிய பொருளாதார சாத்தியவளங்கள் மற்றும் முழுமைப்படுத்த வேண்டிய பொருளாதாரக் கட்டமைப்புக்களை அடையாளங்கண்டு தற்போது காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தகப் பெறுமதியான 550 மில்லியன் அமெரிக்க டொலர்களை, 1.5 பில்லியன் டொலர்கள் வரைக்கும் அதிகரிக்கின்ற நோக்குடன் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படடது.
அதற்கமைய, பண்டங்கள், ஆற்றல்வளம் தொடர்பான ஒழுங்குகள், சேவைகள், முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்புக்கள், பொருளாதார பரிகாரங்கள், சுங்க நடவடிக்கை முறைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகன கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்காக 2018.07.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2018 யூலை மாதம் முதலாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையிலும், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 2018 செப்ரெம்பர் மாதம் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலும் நடாத்தப்பட்டன. அதன் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 2023 ஜனவரி மாதம் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்தப்பட்டதுடன்,
குறித்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் பற்றி நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.
02. இந்தோனிசியா குடியரசின் தேசிய கண்காணிப்பு மற்றும் மீட்பு முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கும் இடையிலான ஒப்பந்தம்
இலங்கை சர்வதேச சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் சிக்காக்கோ சமவாயத்தில் கையொப்பமிட்ட அரசாக எமது நாட்டில் வான்பரப்பில் பறப்பதற்காக அனைத்து விமானங்களுக்கான விமான நிலைய சேவைகள் விமான சேவைகள், விமானப் பயணங்கள் பற்றிய தகவல் சேவைகள் மற்றும் அபாய எச்சரிக்கை சேவைகள் வழங்க வேண்டியதுடன், அதற்கான கடப்பாடுகளையும் கொண்டுள்ளது. கொழும்பு வான்பறப்பு தகவல் வலயத்தின் தென்கிழக்கு எல்லை இலங்கை மற்றும் இந்தோனேசியா கூட்டாக பயன்படுத்தி வருகின்ற அயல் நாடாகும்.
குறித்த வலயத்தில் கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பொறுப்பு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் சிக்காக்கோ சமவாயத்திற்கமைய கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைப் பலப்படுத்துவதற்காக ஆட்புல பூகோளப் பிரதேசத்தில் கண்காணிப்பு மற்றும் மீட்;பு அலகுகளுக்கு உள்நுழைகின்ற நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அருகிலுள்ள அரசால் அயல் நாட்டு அரசுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது அவசியமாகும்.
அதற்கமைய, இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மற்றும் இந்தோனிசியா குடியரசின் தேசிய கண்காணிப்பு மற்றும் மீட்;பு முகவர் நிறுவனத்துடன் 05 வருடகாலப்பகுதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டதுடன், குறித்த காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளது.
இருதரப்பினர்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில் 2023.01.23 திகதி தொடக்கம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேலும் 05 வருடங்களுக்க நீடிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பங்களாதேசம் – இலங்கை ஒருங்கிணைந்த ஆலோசனை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இரு நாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதார, தொழிநுட்ப, மற்றும் விஞ்ஞான ரீதியான கொன்சியூலர் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கள் உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் பங்களாதேசம் – இலங்கை ஒருங்கிணைந்த ஆலோசனை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தரப்பினர்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்களை அனைத்து துறைகளிலும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மட்டத்தில் மீளாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் ஒத்துழைப்புக்களின் புதிய துறைகள் பற்றி ஆராய்வதற்கான பொறிமுறையாக, முன்மொழியப்பட்டுள்ள ஆலோசனை ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரி;ன் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜோர்தான் ஹஷேமயிட் இராச்சிய அரசின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பான அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஜோர்தானின் ஹஷேமயிட் இராச்சியத்தின் அரசின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பான அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார, கொன்சியுலர், தொழிநுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான ஒத்துழைப்புக்கள் உள்ளடங்கிய இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பலப்படுத்தல் மற்றும் விரிவுபடுத்தல் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. கொழும்பு நகர அதிகார இடப்பரப்பினுள் வளிமண்டல வாயு நிலைமையை முகாமைத்துவப்படுத்துதல் தொடர்பான ஆதாரபூர்வமான மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்தும் இயலளவு விருத்திக் கருத்திட்டம்
கொழும்பு நகர அதிகார இடப்பரப்பினுள் வளிமண்டல வாயு நிலைமையை முகாமைத்துவப்படுத்துதல் தொடர்பான ஆதாரபூர்வமான மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்தும் இயலளவு விருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அனுசரணை வழங்குவதற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கருத்திட்டத்தின் தொழிநுட்பப் பங்காளராக இலாபமீட்டாத நிறுவனமாகிய ‘எயார்பரிஸ்’ நிறுவனத்தின் மூலம் கருத்திட்டத்திற்கான மொத்த தொகையாக 300,000 யூரோக்கள் பெற்றுத்தரப்படும். கருத்திட்டத்தின் ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம், ‘எயார்பரிஸ்’ நிறுவனம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான முத்தரப்பு கூட்டு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கும், கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்புக்களுக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தலைமையில் நெறிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் (Single Use) ) ப்ளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுப் பொருட்களை கட்டுப்படுத்துதல்
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி அகற்றப்படும் (Single Use) ) ப்ளாஸ்ரிக்ஃபொலித்தீன் 07 உற்பத்திகளை இறக்குமதி செய்தல், நாட்டில் உற்புத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 2021.08.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அதற்கமைய குறித்த யோசனை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளுடனான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு, கீழ்க்காணும் ப்ளாஸ்ரிக் உற்பத்திகளை இறக்குமதி செய்தல், நாட்டில் உற்புத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துதல் 2023.06.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• ஒருமுறை மாத்திரம் பயன்படுத்துகின்ற பானம் அருந்தும் ப்ளாஸ்ரிக் ஸ்ட்ரோ மற்றும் கலக்கும் உபகரணங்கள்
• ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்படும் யோகட் கரண்டி உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி அகற்றப்படும் பீங்கான், கோப்பை (யோகட் கப் தவிர்ந்த), கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள்
• ப்ளாஸ்ரிக் மாலைகள்
• ப்ளாஸ்ரிக் மூலம் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள்
07. இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
சட்ட வரைஞர் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை நீர் வானூர்தி நிலைய ஒழுங்குவிதிகள்
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஏதுவாக அமையும் கவர்ச்சிகரமான வர்த்தமாக 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் மிதவை விமானங்களின் தொழிற்பாடுகள் (Float Plane Operations) ஆரம்பிக்கப்பட்டன. தற்போது குறித்த நீர் வானூர்தி நிலைய தொழிற்பாடுகளில் ஒரு தனியார் நிறுவனம் மாத்திரம் ஈடுபட்டு வருவதுடன்,
எதிர்வரும் காலங்களில் குறித்த துறைசார் நடவடிக்கைகளுக்காக மேலும் பல நிறுவனங்கள் முன்வரக் கூடுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், நீர் வானூர்தி நிலைய தொழிற்பாடுகளின் தேவைகள் மேலெழுந்துள்ளன. அதற்கமைய, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து சமவாயத்தின் கடப்பாடுகளுக்கு இணங்கியொழுகி, 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு 01 இலக்க இலங்கை நீர் வானூர்தி நிலைய ஒழுங்குவிதிகள், 2022.08.09 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. புதிய மதுவரிச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்
மதுசாரம் மற்றும் புகையிலைப் பாவனை, அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்களை ஒழுங்குபடுத்துதல், குறித்த உரிமப்பத்திரங்களை வழங்குதல், மற்றும் வரி விதிப்பனவுகளுக்காக 1912 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதுடன்,
மதுவரிக் கட்டளைச் சட்டம் மற்றும் புகையிலை வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மதுவரிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் 2022 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த கருமத்திற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்தி இலங்கையில் சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகள் விநியோகத் தொகுதியை மேம்படுத்துவதற்காக ஜப்பான், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான வழங்கல்
தற்போது இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மற்றும் அவசர சுகாதார சேவைகளை தங்குதடையின்றி மேற்கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்கான எரிபொருள் (பிரமானமாக டீசல்) விநியோகித்தை உறுதிப்படுத்துவதற்கு 05 பில்லியன் ஜப்பான் யென்களை (அண்ணளவாக 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த வழங்கலைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.