உள்நாடுபிராந்தியம்
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 2 கடல் ஆமை, 1 டொல்பின்
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு கடல் ஆமைகள் உட்பட ஒரு டொல்பினும் இன்று (19) கரையொதிங்கியுள்ளது.
கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டனர்
இறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய சுற்று வட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளார்.