crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூஜின் ஜியோங் (Woonjin Jeong) தலைமையிலான கொரியாவின் புசான் பெருநகரசபையின் (Busan Metropolitan City Council) 13 பேர் அடங்கிய தூதுக்குழு இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (17) சந்தித்தனர்.

புசான் நகரில் நடாத்த எதிர்பார்க்கும் 2030 உலகக் கண்காட்சி (2030 World Expo) தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் இலங்கை – கொரிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, கருணாதாச கொடிதுவக்கு மற்றும் பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 + = 22

Back to top button
error: