crossorigin="anonymous">
உள்நாடுபொது

இறந்த இராணுவ வீரரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டவரப்பட்டது

ஐ.நா. அமைதிகாக்கும் படையின் மாலியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் மாரடைப்பால் இறந்த 6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய (42) அவர்களின் பூதவுடல் புதன்கிழமை (22) பிற்பகல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அவரது பூதவுடல் பேழை இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினரால் இராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஐ.நா.வின் கொடி போர்த்திய பேழையை மாலியை தளமாகக் கொண்ட 4 வது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் குழுவின் வழங்கல் மற்றும் போக்குவரத்து அதிகாரியான லெப்டினன் கேணல் எச்.எம்.டபிள்யூ.ஆர் ஹேரத் அவர்களால் இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த போர்க் கருவி பணிப்பாளர் நாயகமும் இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சம்பிரதாய அணிவகுப்பின் பின்னர் பூதவுடலை முறைப்படி பெற்றுக் கொண்டதனை அடையளப்படுத்தும் வகையில் லெப்டினன் கேணல் எச்.எம்.டபிள்யூ.ஆர் ஹேரத் அவர்களிடம் ஐ.நா கொடி ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைவீரரான லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல் தேசப்பிரிய அவர்களின் இறுதிச் சடங்குகள் இராணிவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான வரக்கா பொலவில் நடைபெறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 97 − 92 =

Back to top button
error: