இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவைக் கோரியுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று முன்தினம் (25) தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.