crossorigin="anonymous">
பிராந்தியம்

தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்விப் பிரிவு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் பட்டிமேடு தி/இ.கி.ச.சாரதா வித்தியாலயத்தில் விசேட தேவையுடைய கல்விப் பிரிவு நேற்று (02) திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட செயலக சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி பிரிவு திறந்து வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் விசேட கல்வி திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது .

இதில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் சக்கர நாற்காலியும் கையளிக்கப்பட்டன.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்தார். இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் விசேட கல்வி பிரிவு மூலம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆசிரியர்களால் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் .இவ்வாறான மாற்றுத் திறனாளி ஒருவர் எமது பிரதேச செயலகப் பகுதியில் இருந்து இலங்கை தேசிய அணியில் கிரிக்கட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா செல்லவுள்ளார் .அது போன்று இதே பாடசாலையிலும் இவ்வாறான மாணவர்கள் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் .இதற்காக சகலரினதும் ஒத்துழைப்புடன் கூடிய கற்றலுக்கு உதவ வேண்டும் .இதற்காக தாங்களும் கல்வி திணைக்களம் ,மாவட்ட செயலகம் ,பிரதேச செயலகமும் இயன்றளவான உதவியினை செய்யவுள்ளோம் என்றார்.

இதில் மாவட்ட செயலக சமூக சேவை திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன்,சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன், உதவி கல்வி பணிப்பாளர் ஜனார்த்தனன், ஆசிரிய ஆலோசகர் அகிலன், பாடசாலை அதிபர் எஸ்.சிவனேசன், சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர் துவாரகன், ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 4

Back to top button
error: