இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர்,
“வனாத்தவில்லு பிரதேசத்தில் 18 ஏக்கர் காணி, காத்தான்குடி ஒல்லிபுரம் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணி, தெமட்டகொட பிரதேசத்தில் எட்டு பேர்ச் காணி என்பனவும் முடக்கப்பட்டுள்ளன.
28 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, 8 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி, 14 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாணிக்கக் கற்கள் உட்பட வாகனங்களையும் போலிசார் கைப்பற்றி உள்ளார்கள்” என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.