crossorigin="anonymous">
பிராந்தியம்

காத்தான்குடியில் பெண்கள் காப்பகத்திற்கான கட்டிட திறப்பு விழா

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் காப்பகத்திற்கான கட்டிட திறப்பு விழா நேரு முன்தினம் (05) ஞாயிற்றுக்கிழமை பெண்கள் காப்பகத்தின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா  தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முன்னாள் ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஒ.எல்.அமீர் அஸ்வத் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், Rainco உரிமையாளர் எம்.பெளஸ், அஷ்சேய்க் எம்.ஜே.எம்.உஸ்தாஸ் மன்சூர், ஜம்மியத்துல் ஸபாப் பணிப்பாளர் மௌலவி எம்.எச்.எம்.தாஸீம் (கபூர்) ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்டனர்..

காத்தான்குடி பிரதேசத்தில் சமூக ரீதியில் கைவிடப்பட்ட சிறுமிகள், பெண்கள், மற்றும் வயோதிப பெண்களுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் காப்பகமானது நான்கு வருடங்களாக தற்காலிகமாக செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரமுகர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: