450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இலங்கையின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15 ரூபாவால் நேற்று (08) குறைத்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை குறைந்துள்ளதை அடுத்தே, அந்த நிறுவனத்தால் விற்பனைச் செய்யப்படும் சகல வகையான கோதுமை மாவின் விலைகளையும் கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது,