மகளிர் தின விழாவும் சாதனைப் பெண் விருது வழங்கலும்
மன்னார் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கலும் இம்மாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்பன இணைத்து மன்னார் மாவட்டச் செயளகத்தின் ஒழுங்கமைப்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் போராசிரியர் சிறீசற்குனராஜா பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி சி.தே. தேவராஜா, மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.சி.வொலன்ரைன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி நிஷாந்தினி நடராசா ஆகியோரும் கலந்து கொள்வர்
விசேட விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் திரு மா. ஸ்ரீசுகந்தமுமர், மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க.சுரவந்தராஜ், மடு பிரதேச செயலாளர் கி.பி.நிஜாகரன், முசலி பிரதேச செயலாளர் சி.ரஜீவ் ஆகியோரும், கலந்து கொள்வர்
கௌரவ விருந்தினர்களாக மன்னார் நகர சபை செயலாளர் மசனட் ஜேசுதாஸ் ரோச், மன்னார் பிரதேச சபை செயலாளர் திருமதி செல்வராஜ் குரூஸ், யு.எப்.டி பியன் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் இ. சர்மானந்தா, இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழக நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திருமதி சி.சுதர்சினி ஆகியோரும் கலந்து கொள்வர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோத்தர் இ.நித்தியானந்தன் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்துவார். பேசாலை பதி முருகன் ஆலய பிரதம குருக்கள் சிவசிறீ மகா தர்ம குமாரக் குருக்கள் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.
நடன நிகழ்வுகள், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கல் விழா, மூத்த பெண்கை கௌரவம் வழங்கும் நிகழ்வு, மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன சிறப்பு நிகழ்வுகளா நடைபெறும்.