crossorigin="anonymous">
பிராந்தியம்

‘போதைப் பாவனையிலிருந்து நாட்டை மீட்போம்’ சைக்கிள் பவனி

போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விமோச்சனா இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பவனி நேற்று (19) மட்டக்களப்பை வந்தடைந்தது.

விமோச்சனா இல்லத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு நிதானமான வாழ்வை பெற்றவர்களின் சைக்கிள் அமைதிப் பயணம் கடந்த 17ம் திகதி கொழும்பு ஜாயல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று திகதி மட்டக்களப்பு கல்லடியில் நிறைவடைந்ததுடன், இதன்போது 50 அடி நீளமான தேசியக்கொடி காட்சிப்படுத்தப்பட்டு சமாதானத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை விமோர்ச்சனா இல்ல வளாகத்தில் விமோர்ச்சனா இல்லத்தின் இஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான தலைவி தேவதர்மினி செல்விக்கா சகாதேவன் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து சிறப்பித்துள்ளார்.

நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் உள்ளிட்ட மேலும் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − 63 =

Back to top button
error: