இலங்கையில் ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக கொழும்பு 10ல் அமைந்துள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதலாம் மாடியில் முதன்முறையாக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று நேற்று (21) பௌத்த விவகார மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் ஹஜ் கமிட்டி மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர்களான பைசால் காசீம், முசாரப், மர்ஜான் பழீல் . இசாக் ரஹ்மான் , ஹஜ் கமிட்டியின் தலைவர் இப்றாஹீம் அன்ஸார், முஸ்லிம் சமய பண்பாட்டு அவுலுவல்கள் திணை்க்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். பைசல் ஹஜ் கமிட்டியின் உறுப்பிணர்களும் கலந்து சிறப்பித்தனர்.