இலங்கையில் எந்த பகுதியிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (22) தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவித்துள்ளது
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவும், புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.