பிராந்தியம்
புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர் பாராட்டு விழா

(நதீர் சரீப்தீன்)
இரத்தினபுரி – பாலாங்கொடை அல்மினாரா வித்யாலயத்தில் 2022 ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் (19) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வித்தியாலயத்தின் அதிபர் எம்.இஸட்.எம்.முக்தார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாலங்கொடை வலய க்கல்வி பணிப்பாளர் திருமதி நதீகா செனவிரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
விசேட அதிதிகளாக பாலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபைத் தலைவர் என.எல். நஜீபுதீன் , Dr. என்.ரிபாய்தீன் Dr. எம்.ஜி.சாகீர், ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்முறை பரீட்சையில் 18 மாண வார்கள் சித்தி பெற்றதுடன் 58 மாண வார்கள் 100 க்கு மேல் புள்ளிகள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது