ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தன்பாலின உறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, LGBTQ என அடையாளப்படுத்திக் கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட, LGBTQ பிரிவினர், தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தன்பாலின உறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.