காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவி நீக்கம்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதேச காரியாலயத்தில் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றிய என். விமல்ராஜ் 2023.02.24 திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்ய காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதேச காரியலயத்தின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் கீழ் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தின் ஏழாயிரம் ஏக்கர் அரச காணிகளை போலி ஆவணங்களை தயாரித்து அரச காணிகளின் அரச உரிமைகளை சிதைத்து அந்த காணிகளை 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுப்பட்டார் என்பது அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.
இதனடிப்படையில் காணி அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவின் ஓய்வு பெற்ற பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான சமன் எதிரிசிங்க தலைமையின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்றன. அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக்கு பின் என். விமல்ராஜ் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.