crossorigin="anonymous">
உள்நாடுபொது

IMF ஆதரவுடன் 4 வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்தீரம் – ஜனாதிபதி

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு ஆனந்தா ஆனந்தா கல்கல்லூரியின் 135வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (29) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2020-2021 ஆண்டுகளில் திறமை செலுத்திய மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி முதலில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார். ஜனாதிபதிக்கு கல்கல்லூரி சாரணர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தேசிய, மத, கலாசார, அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி இன அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுபசன் ஆனந்திய நபர் ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் “ஆனந்தபிமானி” விருதை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டதோடு, தனது பாடசாலை வாழ்க்கையின் போது சகல துறைகளிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த ஆனந்த மாணவருக்கான “பிரிட்ஸ்கூன்ஸ்” விருது டபிள்யூ. எஸ். நிம்சத்திற்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய ரங்வல தம்மரக்சித்த தேரர், வணக்கத்திற்குரிய ஓனகம உபாலி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் , கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஆனந்த கல்லூரி அதிபர் லால் திசாநாயக்க, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 14 = 17

Back to top button
error: