இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை இன்று (01) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் புதிய விலையில் பால் மாவை சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மா விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.