கல்லூரி மாணவர்கள் காதலிக்க கற்றுக்கொள்ள விடுமுற

சீனா – சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை விடுமுறையில் வெளியே சென்று கொண்டாட வசதியாக கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது
சீன மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்வி கல்லூரியின் துணை முதல்வர் லியாங் குவோஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வசந்த கால விடுமுறையை வழங்குகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் ஏப்ரல் 5ஆம் திகதி கிங்மிங் திருவிழாவாக அறியப்படுகிறது. அதையொட்டி சீனாவில் இந்நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ‘கல்லறை சுத்தம் செய்யும் தினம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த நாளில் முன்னோர்களின் கல்லறைக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.
இதையொட்டியே இந்த கல்லூரிகள் விடுமுறையை நீட்டித்து வசந்த கால விடுமுறை என்று அறிவித்து இருக்கிறது.