இனங்களுக்கிடையில் நல்லுரவை ஏற்படுத்தும் இப்தார் நிகழ்வு
இனங்களுக்கிடையில் நல்லுரவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஸஹரா நிதியத்தின் அனுசரனையில் பியகம (மள்வானை) பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்த இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வுகள் நேற்று முன்தினம் (16) மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
சர்வ மதத் தலைவர்கள , (ஶ்ரீ சுதர்மாராமய ,அமர ஶ்ரீ அனாதை இல்லம் விகாரஸ்தாதிபதி டிரினிடியன் அமைப்பின் செயலாளர் அமர ஶ்ரீ பெலிகள நாயக்க தேரோ , அகில இலங்கை இந்து மாமன்ற குருக்கள் சிவ தர்சக குருக்கள் , அதி வணக்கத்துக்குரிய கிரிஸ்தவ பாதிரியார் வண்ணிய பண்டார அவர்கள் ,அஷ்ஷேக் ஸாஜித் கான் ஹுமைதி ஸம்ஸம் நிதியம் ) மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ,பியகம பிரதேச செயலக பிரதி செயலாளர், மற்றும் அதிகாரிகள் ,சுகாதார அதிகாரிகள்
தபால் ஊழியர்கள் ,பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட உத்தியோகத்தர்கள் ,பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள் , அபிவிருத்திக்குழு ,பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் ,நீர் பாசன சபை உத்தியோகத்தர்கள் ,மின்சார சபை உத்தியோகத்தர்கள் ,வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் ,ஊடகவியலாளர்கள்,பிரதேசத்தில் உள்ள அந்நிய மதஸ்தளங்களின் நிருவாகிகள் ,பள்ளிவாசல்களின் நிருவாகிகள் அமைப்புகளின் பிரதி நிதிகள் ,பிரதசத்தில் உள்ள சிங்கள ,முஸ்லிம் ,தமிழ் ,கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டிருந்த பெருந்திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மள்வானை முஸ்லிகள் சார்பாக சர்வமதத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஸஹரா நிதியத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி பௌசுல் ஜிப்ரி அவர்களின் எண்ணத்தில் உலகலாவிய ரீதியாக இடம்பெற்று வரும் இனங்களுக்கிடையில் நல்லுறவை பேணும் வகையில் நடைபெற்று வரும் பல வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்
இந்நிகழ்வுகள் பெறும் வரவேற்பை பெற்றிருந்ததோடு தாம் இவ்வாறானதொரு நிகழ்வவில் முதற்தடவையாக பங்குகொண்டதாகவும் வருகைதந்திருந்த சிங்கள பௌத்த மதகுருமார்கள் உற்பட சிங்கள சகோதர்ர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்
இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனவும் முஸ்லிம்களின் விருந்தோம்பலை தாம் வாழ்வில் என்றும் மறக்கமாட்டோம் எனவும் தம்மை அழைத்தமைக்கு ஏற்பாட்டுக்குழுவுக்கு நன்றி கூறுவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.