crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய இலங்கையிடம் கோரவில்லை – சீன தூதரகம்

இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது

இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று (19) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவியபோதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒரு பங்காளியாக தமது நாடு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை பல திருத்தங்களுடன் நிறைவேற்றியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 83 + = 90

Back to top button
error: