வெளிநாடு
பிரிட்டன் துணை பிரதமர் ராஜினாமா
பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் (Dominic Raab) நேற்று (21) ராஜினாமா செய்துள்ளார்
நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களிலும் தலையிட்டதாக துணைப் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பிரிட்டன் துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்துள்ளார்
அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டோலி, பிரதமரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ராப் இந்த இராஜினாமாவை செய்துள்ளார்
டொமினிக் ராப் ராஜினாமா குறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில்,
“நான் இன்னமும் டொமினிக் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆனால் அறிக்கை குறித்து நான் கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது” என்றார்.